பொது செய்தி

இந்தியா

ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழத்திய மிதுன்

Added : நவ 30, 2019
Advertisement
abhimanyu mithun,5 விக்கெட், மிதுன்,mithun,5 wicket

சூரத்: சையது முஷ்தாக் அலி டிராபி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணி (195/2, 15 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியானாவை (194/8, 20 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் 'வேகத்தில்' மிரட்டிய கர்நாடகா அணியின் அபிமன்யு மிதுன், ஒரே ஓவரில் 'ஹாட்ரிக்' உட்பட 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்மூலம் உள்ளூர் தொடரில் மூன்று வித போட்டிகளிலும் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரரானார். ஏற்கனவே இவர் ரஞ்சி கோப்பை (முதல் தரம், 2009, எதிர்: உ.பி.,), விஜய் ஹசாரே டிராபி ('லிஸ்ட் ஏ', 2019, எதிர்: தமிழகம்) தொடரில் இச்சாதனை படைத்திருந்தார்.

* இலங்கையின் மலிங்காவுக்கு பின் (எதிர்: நியூசிலாந்து, 2019), 'டுவென்டி-20' போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் கைப்பற்றிய பவுலரானார் மிதுன். தவிர இவர், வங்கதேசத்தின் அல் அமின் ஹொசைனுக்கு பின் (2013, உள்ளூர்) 'டுவென்டி-20'யில் ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய பவுலரானார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X