பொது செய்தி

தமிழ்நாடு

மதிப்பு கூ(ட்)டிய தேங்காய் சிரட்டை

Added : நவ 30, 2019
Advertisement
 மதிப்பு கூ(ட்)டிய தேங்காய் சிரட்டை

செம்பட்டி : பயன்பாடற்ற வீசி எறியும் பொருட்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால், வீட்டு 'பட்ஜெட்'டுக்கு பலம் கிடைக்கும். இன்று இடங்களுக்கும், எல்லா பொருட்களுக்கும் உள்ள மதிப்பை மனிதர்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

அதனால்தான் குக்கிராமங்களில்கூட, வீணாகும் பொருட்களையும் மதிப்பு கூட்டி பயன்படுத்தும் அதிசயங்கள் அரங்கேறுகின்றன.சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காயின் ஓடான சிரட்டை வீணான கழிவுப் பொருளாகத்தான் பலர் பார்த்தனர். இன்று இதன் மதிப்பை கூட்டி, வீட்டில் பூஜை அறையையே அலங்கரிக்கும் பொருளாக மாற்றி வருகிறார் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்., பட்டி சுரேஷ் 56.இவரது மனக்கருவுக்கு ஆத்துார் தேங்காய் உருக்கொடுக்கிறது என்றால் அது மிகையில்லைதான்.

அவர் கூறுவதை கேளுங்களேன்:1982ல் டூல் அண்ட் டையிங் டிப்ளமோ முடித்து, 30 ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றினேன். கற்ற கல்வியாலும், இயற்கை விவசாய ஆர்வத்தாலும் சிரட்டையை பயனுள்ளதாக மாற்றி வருகிறேன். வீணாகும் சிரட்டைகளில், கிண்ணம், உழக்கு போன்ற அளவீட்டு கருவிகள், சாம்பிராணி, ஊதுபத்தி, பென்சில், பேனா ஸ்டாண்டுகள் என பலவடிவ பொருளாக தயாரித்து வருகிறேன்.சொந்த அனுபவம் மூலம் இவற்றை தயாரிக்கும் கருவிகளையும் நானே வடிவமைத்துள்ளேன்.

இயற்கை விவசாய தேடலின்போது இம்முயற்சி பலனளித்தது. சாதாரண தேங்காய் சிரட்டையில் போதிய தடிமன் இருக்காது. ஆத்துார் தேங்காயில் சிரட்டை 2.5 மி.மீ.,க்கு மேல் தடிமன் இருப்பதால், பலவடிவ தயாரிப்புக்கு அற்புதமாக உதவுகிறது. ஆத்துார் தேங்காய் வாங்கி, அதன் பருப்பில் சல்பர் கலப்பின்றி எண்ணெய் தயாரித்து இயற்கை விவசாய மார்க்கெட்டில் விற்பேன்.சிரட்டைகளை வீணாக்காமல் முதல் கோட்டிங், பல்வேறு வடிவங்களுக்கு கட்டிங், துளையிடுதல், வார்னிஷ் கொண்டு பாலிஷ் செய்து எண்ணங்களுக் கேற்ப வடிவம் கொடுக்கிறேன்.

பிளாஸ்டிக் தடையால் இதுபோன்ற தயாரிப்புக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனை ஆன்-லைன் விற்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இவரை பாராட்ட 83006- 04997ல் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X