குஜிலியம்பாறை : தமிழக அரசு அறிவித்த பஸ் டெப்போ அமைக்காததை கண்டித்து, மார்க்சிஸ்ட் சார்பில் பாளையத்தில் ஆர்பாட்டம் நடந்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பாளையம் அருகே உள்ள மேட்டுக்களத்துாரில் அரசு பஸ் டெப்போ அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தும், பஸ் டெப்போ கட்டுவதற்கான எந்த முயற்சியும் இல்லை.இதை கண்டித்து குஜிலியம்பாறை ஒன்றிய மார்க்சிஸ்ட் சார்பில் பாளையத்தில் ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் ராஜரத்தினம், மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் பேசினர்.
அதில், பாளையத்தில் அறிவிக்கப்பட்ட பஸ் டெப்போ கட்டும் பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும். உயர் மின் கோபுர விளக்கை எரியவிட வேண்டும். குஜிலியம்பாறை, பாளையம் பஸ் ஸ்டாண்டுகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகள் தங்கவேல், ஜெயபால், ஆறுமுகம், பாலசுப்பிரமணி, ராமு பங்கேற்றனர்.