பொது செய்தி

தமிழ்நாடு

நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும்பணி மும்முரம்

Added : நவ 30, 2019
Advertisement

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில், நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.

மெட்டூர் - அவிநாசிபாளையம் ரோடு அகலப்படுத்தப்பட்டு, நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளின் ஒருபகுதியாக, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில் பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. ஒட்டன் சத்திரத்திற்கும், தங்கச்சியம்மாபட்டிக்கும் இடையே நங்காஞ்சி ஆறு செல்கிறது. இந்த ஆற்றைக் கடக்க புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாலத்தில் விபத்து நடந்தால் போக்குவரத்து தடைபடும்.இதனால் பல கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது. பாலத்தின் முடிவில் ரோட்டுப் பகுதி வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது. தற்போது கட்டப்பட்டு வரும் பாலம் அகலமாக உள்ளதால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதுடன், போக்கு வரத்துக்கும் வசதியாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X