சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தர்கா கொடிக்கம்பத்தில் கட்சி வண்ணப்பூச்சு

Added : நவ 30, 2019
Advertisement

செம்பட்டி : சித்தையன்கோட்டை தர்கா கொடிக்கம்பத்தில், ஒரு அரசியல் கட்சிக்கொடியின் வண்ணத்தைப் பூசியதால் சர்ச்சை ஏற்பட்டது.

செம்பட்டி அருகே உள்ளது சித்தையன்கோட்டை கிராமம். இங்குள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, டிச.8-ல் நடக்க உள்ளது. இதற்காக, நேற்று கொடியேற்றம் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் தர்கா கொடிக்கம்பத்தின் மீது ஒரு குறிப்பிட்ட ஒருஅரசியல் கட்சிக் கொடியின் சிவப்பு, பச்சை வண்ணத்தைப் பூசி இருந்தனர். இதனருகே இருந்த சர்புதீன் என்பவரது வீட்டின் சுவரிலும் இதே வண்ணக் கொடி போன்று வரைந்திருந்தனர்.

அதிகாலை தொழுகைக்கு சென்ற சிலர் இதனை கவனித்தனர். இந்த விஷமச் செயல் குறித்து தகவல் பரவியதால், ஏராளமானோர் இப்பகுதிக்கு வரத்துவங்கினர். ஜமாத் தலைவர் உதுமான் அலி போலீசில் புகார் செய்தார்.டி.எஸ்.பி.,கள் சீமைச்சாமி, பாலக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தினர்.பிரச்னைக்குரிய வண்ணப்பூச்சுகளை அழிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ரகசிய இடத்தில் வைத்து சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X