பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் அறிவதில் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு

Added : நவ 30, 2019
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தகவல் உரிமை சட்டத்தில் தகவல் அளிக்காமல் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது ஆணையர் முத்துராஜா விசாரணை நடத்தினார்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் கல்வித்துறையில் தகவல் அளிக்காமல் நிலுவையில் இருந்த 30 மனுக்கள் மீது ஆணையர் விசாரணை நடத்தினார்.அதில் பழநிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் சுகாதாரம் மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சியில் சுகாதாரம் குறித்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருந்தது. உடனே சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறியது: தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல் பெறுவதில் தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். தகவல் பெற ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவர் ஒரே விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். பொது தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிடில் அல்லது பதிலில் திருப்தி இல்லை எனில் பதில் பெற்ற 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

அவரும் 30 நாட்களுக்குள் பதில் அளிப்பார். இதிலும் திருப்தி இல்லையெனில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். தீர்வு காணாத மனுக்கள் மீது ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X