பொது செய்தி

தமிழ்நாடு

மோர்பட்டியில் காய்ச்சல் பாதிப்பு மருத்துவக் குழுவினர் முகாம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை அருகே இரு கிராமங்களில் அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டி, நாடுகண்டனுார் கிராமங்களில் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டனர். சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள்மணி, காணப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள்

வடமதுரை : வடமதுரை அருகே இரு கிராமங்களில் அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டி, நாடுகண்டனுார் கிராமங்களில் ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டனர். சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள்மணி, காணப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அசோக்குமார், நடமாடும் மருத்துவக்குழு டாக்டர்கள் ஷியாமளா, பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் இரு கிராமங்களிலும் முகாமிட்டனர்.

காய்ச்சல் பாதித்தவர்களை கணக்கெடுத்து சிகிச்சை தரப்பட்டது. ஊராட்சி செயலாளர் வீரமணி மற்றும் துாய்மை காவலர்கள் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கொசுப்புழு, முதிர்கொசு ஒழிப்பு பணிகள் செய்யப்பட்டன. சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. மழை நேரத்தில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல்தான் பாதித்துள்ளது. அதுவும் கட்டுக்குள் உள்ளது'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X