பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் தயாரித்த நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

Added : நவ 30, 2019
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல், பழநியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரித்த 8 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் திண்டுக்கல், பழநியில் நடத்திய

திண்டுக்கல் : திண்டுக்கல், பழநியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரித்த 8 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் திண்டுக்கல், பழநியில் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் கப் தயாரித்த 8 நிறுவனங்களை கண்டுபிடித்தனர். அந்நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து தயாரித்தால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் முத்தழகுப்பட்டி அருகே ஒரு நிறுவனத்தில் பிளாஸ்டிக் பை தயாரிப்பதாக போலீசார் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற சுகாதார ஆய்வாளர்கள் 500 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபாரதம் விதித்தனர். அந்நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X