வடமதுரை : வடமதுரை அருகே கோயிலில் சுவாமி சிலைகள் சேதமாக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வடமதுரை அருகே மோர்பட்டி மேற்குத்தெரு பகுதியில் மதுரை வீரன், பட்ட வீரன், சீலைக்காரியம்மன் கோயில்கள் உள்ளன. திறந்தவெளியில் வேம்பு, அரச மரங்களுக்கு அடியில் அமைந்துள்ளன. இக்கோயிலில் கடந்த செப்டம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் நேற்று மதுரைவீரன் சுவாமி சிலையின் கைப்பாகம் உடைந்திருந்தது. பட்டவீரன் சுவாமி சிலையில் இருந்த அரிவாள் வளைக்கப்பட்டிருந்தது.
சீலைக்காரியம்மன் சிலையில் இருந்த கவரிங் நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன. கடந்தாண்டு வடமதுரை வேலாயுதம்பாளையம் அடுத்த ஊற்றாக்கரையில் நவகிரகங்கள், முருகன், விநாயகர், தீப கன்னி சிலைகள், பாம்பு, மான், நாய் சிலைகளை ஒரு மர்மக்கும்பல் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.