மேல்நிலை மாணவருக்கு சக்சஸ் மந்த்ரா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நிலை மாணவருக்கு 'சக்சஸ் மந்த்ரா'

Added : நவ 30, 2019

திண்டுக்கல் : பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தை எதிர்கொள்ளும் வெற்றி ரகசியம் கற்றுத் தரும்தினமலர் நாளிதழின்'சக்சஸ் மந்த்ரா'-ஜெயித்துக் காட்டுவோம் 2.0 வழிகாட்டுதல் நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்ட் ரோடு நாயுடு கல்யாண மண்டபத்தில் இன்று (நவ.30) காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் நாளிதழ் 'ஜெயித்துக் காட்டுவோம்', 'வழிகாட்டி','உங்களால் முடியும்' நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் ஆதரவை பெற்று வருகிறது.தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள'சக்சஸ் மந்த்ரா' - ஜெயித்துக் காட்டுவோம் 2.0எனும் வழிகாட்டுதல்நிகழ்ச்சியை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.

புதிய பாடத்திட்டம் தயாரித்த வல்லுநர் குழு, அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களை கொண்டு புதிய பாடத்திட்டத்தை எப்படி அணுகலாம், அதில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர்., கோடு, அதை பயன்படுத்தும் வழிமுறை மற்றும் பொதுத்தேர்வு நடக்கும் விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.மாணவர்களுக்கு வாய்ப்பு: நுழைவு தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தை பயன்படுத்துவது எப்படி, மனப்பாடம் செய்யாமல்புரிந்துகொள்வது எப்படி, பாடங்களைசு வாரஸ்யமாகபடிப்பது எப்படி, 'கிரியேட்டிவ்' சிந்தனைகளை வளர்ப்பது எப்படி,தேர்வுக்கு முன் உடல் மற்றும் மனதை தயார்படுத்துவது எப்படி, கற்றதை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்துவது எப்படிஎன்பதற்குஇந்நிகழ்ச்சியில் விடை கிடைக்கும்.

அனுமதி இலவசம்: மேல்நிலை வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும், பெற்றோரும் பங்கேற்கலாம். பங்கேற்போருக்கு முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். பொதுத்தேர்வில் சாதிக்க, வெற்றி ரகசியங்களை அறிய உதவும் அற்புத நிகழ்ச்சியை,மாணவர்களே தவறவிடாதீர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X