பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.48 லட்சம் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

Added : நவ 30, 2019
Advertisement

திண்டுக்கல் : தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள 'சகி' எனும் குறுகிய கால பெண்கள் தங்கும் விடுதிக்கு தலா ரூ.48 லட்சம் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

பல வகை துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், குழந்தைகள் புகார் அளிக்க, தங்கி ஆலோசனை பெறுவதற்காக 'சகி' எனும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' குறுகிய கால பெண்கள் தங்கும் விடுதி 32 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இவை செயல்படும். இதற்காக மத்திய அரசு 'நிர்பயா' நிதியின் கீழ் தங்கும் விடுதிகளுக்கு தலா ரூ.48 லட்சம் ஒதுக்கியுள்ளது.ஐந்து நாட்கள் தங்கலாம்:

இந்நிதியில் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் விடுதி அமைக்க வேண்டும். கட்டட பணிகள் முடியும் வரை தற்காலிகமாக அரசு அல்லது தனியார் கட்டடத்தில் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்ப வன்முறை காரணமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த விடுதியில் தேவையான மருத்துவ உதவி, சட்ட உதவி, போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆபத்தில் இருக்கும் பெண்கள் தொடர்பு கொள்ள வசதியாக 181 என்கிற இலவச எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பாதிப்பில் இருக்கும் பெண்ணை மீட்டு ஐந்து நாட்கள் வரை தங்கும் விடுதியில் தேவையான உதவிகள் இலவசமாக செய்து கொடுக்கப்படும். இதற்காக வழக்கு விசாரிப்பாளர், ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் இந்த தங்கும் விடுதிகள் துவங்கப்படும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X