பனமரத்துப்பட்டி: தேனி, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில், நான்காமாண்டு படிக்கும் மாணவியர், இரு மாதத்துக்கு மேலாக தங்கி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், களப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர். நேற்று, அவர்கள், சந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். அதில், வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், மரம் வளர்ப்பு, குளம், குட்டைகளில் நீர் சேமித்தல் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.