பொது செய்தி

தமிழ்நாடு

காற்று மாசுபாட்டை தடுக்க துண்டு பிரசுரம் வழங்கல்

Added : நவ 30, 2019
Advertisement

ஓமலூர்: தொழிற்சாலை, வாகனங்களில் எழும் புகை; சாலை, தெருக்களில் படிந்துள்ள புழுதிக்காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணம். இதனால், மக்கள் பல்வேறு நோய்க்கு ஆளாவதால், காற்று மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி, பசுமை தாயகம் அமைப்பினர், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று மாலை, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி முன், அதன் மாநில இணை செயலர் சத்ரியசேகர் தலைமையில் பலர், மாணவ, மாணவியரிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். அதில், பா.ம.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், வாழப்பாடி, முத்தம்பட்டி வைகை மகளிர் கல்லூரியில், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X