பொது செய்தி

தமிழ்நாடு

கொடிநாள் நிதி வசூலில் இலக்கை மிஞ்சி சாதனை

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: கொடிநாள் நிதி வசூலில், இலக்கை மிஞ்சியதோடு, இரண்டு கோடி ரூபாயை தாண்டி, புது சாதனை படைக்கப்பட்டுள்ளது. போர், அதற்குரிய நடவடிக்கைகளில் உயர்தியாகம் செய்தவர்கள், ஊனமுற்றோர் மறுவாழ்வு, ராணுவத்தினர், அவரது குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி, முன்னாள் படை வீரர், அவரைச் சார்ந்தோரின் குடும்பத்தினருக்கு உதவ, கொடிநாள் நிதி திரட்டப்படுகிறது. வரும், டிச., 7ல், 73வது கொடிநாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனால், விரும்பிய தொகையை, கொடிநாள் நிதியாக செலுத்தலாம். சேலம் மாவட்டத்தில், இதற்கு முன், அதிக பட்சமாக, 2013ல், ஒரு கோடியே, 77 லட்சத்து, 22 ஆயிரத்து 660 ரூபாய், கொடிநாள் நிதி வசூலானது. அப்போது, கலெக்டராக மகரபூஷணம் இருந்தார். தற்போது, நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, இரண்டு கோடியே, இரண்டு லட்சத்து, 600 ரூபாய் வசூலாகியுள்ளது. தொடர்ந்து, வசூல் நடக்கிறது. நடப்பாண்டு, சேலம் மாவட்ட இலக்கு, 1.46 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், அதை தாண்டி, முதல்முறையாக, இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு, புது சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு, கலெக்டர் ராமனின் முயற்சியே காரணமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X