பொது செய்தி

தமிழ்நாடு

ஒற்றை நெல் சாகுபடி முறைக்கு அரசு உதவ வலியுறுத்தல்

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: ஒற்றைநெல் சாகுபடி முறைக்கு, 'லேசர்' கருவியை, ஒன்றியந்தோறும் வழங்கி, விவசாயம், விவசாயிகளை, அரசு ஊக்கப்படுத்த வலியுறுத்தப்பட்டது. சேலம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். அதில், விவசாயிகள் பேசியதாவது: பெருமாள்: வேளாண் விற்பனை மையங்களில், விதை நெல், உளுந்து, கடலை, எள் விற்பது போல, மாட்டு தீவன விதை சோளம், மக்காச்சோளம் விற்க வேண்டும். வெளி சந்தையில், கிலோ, 35 முதல், 40 ரூபாய் வரை விற்ற விதை சோளம், தற்போது, 74 ரூபாயாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஒற்றைநெல் சாகுபடிக்கு, மூன்று மடங்கு லாபம் கிடைப்பதால், அதற்கான லேசர் கருவியை, ஒன்றியந்தோறும் வழங்கி, புது நடவை ஊக்கப்படுத்தி, விவசாயிகளுக்கு உதவ வேண்டும். தியாகராஜன்: கீரிப்பட்டி- ஆத்தூர் வசிஷ்ட நதிக்கு இடைப்பட்ட பேராறு பகுதியில், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து புதர்மண்டியதால், மழை பெய்தும் தண்ணீர் தேங்கவில்லை. கருவேல மரங்களை வெட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை. இல்லையெனில், மக்கள், இலவசமாக வெட்டி எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். வெற்றிமணி: பி.டி.ஓ., தலைமையில் குறைதீர் கூட்டம், விவசாயிகளுக்கு அழைப்பின்றி பெயரளவுக்கு நடக்கிறது. 116 ஏக்கருடைய கொட்டவாடி ஏரியில், 20 ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், குடிமராமத்து பணி நடக்கவில்லை. ஏரியின் ஒரு மதகை, மண்ணை கொட்டி நிறுவி மூடிவிட்டதால், அதன் வழித்தட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குமாரசாமி: பச்சமலைக்கு செல்ல, மாயம்பாடி - வெதும்பியம் வரை, 4 கி.மீ., தூரத்துக்கு சாலை போட வனத்துறை அனுமதிக்க வேண்டும். ஒதியத்தூர், வணிக வளாகத்தில், நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். சின்னசாமி: சுவேத நதி - கூடமலை ஏரிக்கு இடையே, 3 கி.மீ., ஏரி வாய்க்கால், புதர்மண்டியுள்ளதால் நீர்வரத்து தடைபட்டு, ஏரி வறண்டுள்ளது. அதைச்சுற்றி, 2,000 ஏக்கரில், நிலத்தடி நீர் உயராமல், கிணறுகள் வறண்டுள்ளன. டி.ஏ.பி., உரம், ஒரு மூட்டை, 1,300 ரூபாய்க்கு விற்பதால், மானியம் வழங்கி, 700 முதல், 800 ரூபாய்க்கு விற்றால் விவசாயிகள் பயனடைவர். கணேசன்: தலைவாசல் மார்க்கெட்டில், 1,000 சதுரடிக்கு கயிறுகட்டி, அதற்குள், காய்கறி விற்க நெருக்கடி கொடுப்பதால் பாதிக்கப்படுகிறோம். போலீசாரும் அச்சுறுத்துகின்றனர். ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் சுங்கம் வசூலிக்கும் மார்க்கெட்டில், நிரந்தர கடை வியாபாரிகள் கோலோச்சுகின்றனர். விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை. கோவிந்தராஜ்: பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகரித்துள்ள மயில்கள் கூட்டத்தால், நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள், பெருமளவு சேதமானதால், உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். மயில்களை கட்டுப்படுத்த வேண்டும். வறட்சி காலத்தில் வழங்கப்பட்ட தென்னங்கன்று, பட்டுபோனதால், மறுசுழற்சி அடிப்படையில், மீண்டும் தென்னங்கன்று, இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X