பொது செய்தி

தமிழ்நாடு

ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

Added : நவ 30, 2019
Advertisement

ஆத்தூர்: சுங்கச்சாவடி ஊழியர்கள், ஊதிய உயர்வுகோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், கட்டணமின்றி வாகனங்கள் சென்றன.
சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வீரசோழபுரம் ஆகிய இடங்களில், 'ரிலையன்ஸ் நிறுவனம்' ஒப்பந்த அடிப்படையில் சுங்கச்சாவடி அமைத்து, கட்டணம் வசூலிக்கிறது. அங்கு பணிபுரியும், 300க்கும் மேற்பட்டோருக்கு, மூன்றாண்டாக பேச்சுவார்த்தையின்படி, குறிப்பிட்ட ஊதிய உயர்வு வழங்கவில்லை. நேற்று, ஆந்திராவிலிருந்து, 15 தொழிலாளர்கள், நத்தக்கரை சுங்கச்சாவடிக்கு பணிக்கு வந்தனர். இதற்கு, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் பணியமர்த்தப்படவில்லை. மதியம், 12:40 மணி முதல், சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டண வசூல் பணியை மேற்கொள்ளாமல், ஊதிய உயர்வு கோரி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி சென்று வருகின்றன.

இதுகுறித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதாவது: ஊதிய உயர்வுகோரி பலமுறை போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையிலுள்ள மூன்று சுங்கச்சாவடி மட்டுமின்றி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து தொழிலாளர்களை அழைத்துவந்து, பணியமர்த்த முயற்சி நடக்கிறது. தீர்வு காணும் வரை, போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X