பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் சிறுசேமிப்பு திட்டம்: ரூ.964.19 கோடி வசூல்

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: உலக சிக்கனநாள் போட்டியில் வெற்றி பெற்ற, 57 மாணவ, மாணவியருக்கு, நேற்று, சேலம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் ராமன் பரிசு வழங்கி பேசியதாவது: நவ., 30ல், உலக சிக்கனநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மாணவ, மாணவியர் சேமிப்பு பழக்கத்தை கற்க, பல்வேறு போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு என்பதை, அனைவரும், சிறு வயதிலேயே உணர வேண்டும். தேவையற்ற செலவை தவிர்த்தல்; திட்டமிட்டு செலவிடுதல்; ஆடம்பரத்தை கைவிடல், அத்தியாவசிய செலவை மட்டும் மேற்கொள்ளுதல் போன்ற வற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில், 2019 - 20, அக்டோபர் வரை, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில், 964.19 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பாதுகாப்பற்ற தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்த்து, பாதுகாப்பான சிறுசேமிப்பு துறை, அஞ்சல் துறைகளில், 100 சதவீதம் முதலீடு செய்து, தங்கள் பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X