பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் இல்லம் தொடங்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: மத்திய, மாநில அரசு நிதியுதவியில், முதியோர் இல்லம் தொடங்க, தனியார் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, சேலம், கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக நலத்துறை மூலம், ஆதரவற்ற முதியோர் இல்லம் தொடங்க, புது கருத்துருக்கள், தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மாநில அரசு நிதியில், ஆதரவற்ற முதியோர் இல்லம் தொடங்க, குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்காக, ஐந்து பங்கு, அரசு நிதியுதவி, ஒரு பங்கு, தனியார் தொண்டு நிறுவனம் வழங்க வேண்டும். அதில், 40 முதியோர் வரை உள்ள இல்லங்கள், அறக்கட்டளை, நிறுவன சட்டத்தில் பதிவு செய்து, புதுப்பித்து சான்று பெற்றிருக்க வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறப்பட்ட பெற்றோர் - மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டப்படி பதிவு சான்று பெற வேண்டும். அத்துடன், பொதுப்பணி சார்பில், கட்டட உறுதிச்சான்று, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை சான்று, தாசில்தார் வசமிருந்து, முதியோர் இல்லம் செயல்படுத்த, வேறு எந்த நிதியும் பெறவில்லை என்ற சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு, ஒருங்கிணைந்த வளாகம் நடத்த, மாநில அரசு நிதியுதவி, 75 சதவீதம், தொண்டு நிறுவனம், 25 சதவீத செலுத்த வேண்டும். இந்த இல்லத்தில், தலா, 25 குழந்தைகள், முதியோருடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு நிதியுதவியில், மூத்த குடிமக்கள் திட்டத்தில், முதியோர் இல்லங்களுக்கு, 90 சதவீதமும், தொண்டு நிறுவனம், 10 சதவீதமும் அளிக்க வேண்டும். அதில், குறைந்தபட்சம், 25 முதியோர் இருக்க வேண்டும். இது தொடர்பாக, சேலம், கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண்: 126ல், சமூக நல அலுவலரை நேரிலோ, அல்லது, 88836 78037 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க, டிச., 2 கடைசி நாளாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X