பொது செய்தி

தமிழ்நாடு

'செப்டிக் டேங்க் கழிவு அகற்ற முன் அனுமதி அவசியம்'

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: செப்டிக் டேங்க் கழிவு நீர் அகற்றும் பணிக்கு, மாநகராட்சி முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம், திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே, நிறுத்தப்பட்டுள்ள செப்டிக் டேங்க் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, மாநகராட்சி கமிஷனர் சதீஷ், நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது: மனித கழிவை, மனிதர்களே அகற்றும் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகரிலுள்ள, தனியார் தங்கும் விடுதி, திருமண மண்டபம், ஓட்டல், மருத்துவமனை, தனியார் கழிவு நீர் அகற்றும் ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நச்சுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும்போது, போதிய தற்காப்பு நடவடிக்கை, பாதுகாப்பு உபகரணங்கள் இருக்க வேண்டும். நச்சுநீர் தொட்டிக்குள், பணியாளர்கள் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இப்பணியை கண்காணிக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மாநகரில், நச்சு தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளும் முன், எங்கு பணி மேற்கொள்ளப்படவுள்ளது என்பதை, மண்டல அலுவலகத்தில் தெரிவித்து, முன் அனுமதி பெற வேண்டும். அகற்றப்பட்ட கழிவுநீரை, அம்மாபேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கழிவுநீர் ஓடை, மழைநீர் வடிகால்களில், கழிவு நீரை வெளியேற்றுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X