பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகர் இல்ல திருமணத்தில் நகை திருடியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழாவில், 32 பவுன் நகை திருடியவர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சேலம், காசக்காரனுரைச் சேர்ந்தவர் சரவணன். தி.மு.க.,வில், மெய்யனூர் பகுதி கழக செயலராக உள்ளார். இவரது மகள் திருமணம், கடந்த அக்., 31ல், ரெட்டிப்பட்டி, எம்.எஸ்.வி., திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், காசக்காரனூரைச் சேர்ந்த விக்னேஷின் மனைவிக்கு சொந்தமான, 32 பவுன் நகைகள் மாயமாகின. இது குறித்து, கடந்த, 3ல் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார், மண்டபத்திலுள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சின்னதிருப்பதி, அய்யனார்கோவில் காட்டைச் சேர்ந்த மகபூப் அலி, 41, திருடியது தெரிந்து, 7ல், அவரை கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர். மகபூப் அலி, 2016 ஆக., 20ல், பொன்னுசாமி மண்டபத்தில் நடந்த திருமணத்தில், உறவினர்போல் பங்கேற்று, 23 பவுன் நகை திருடிய வழக்கில், அழகாபுரம் போலீசார் கைது செய்தனர். இது தவிர, அவர் மீது, திருட்டு, வழிப்பறி என, மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதால், அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சூரமங்கலம் போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று, கமிஷனர் செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டதால், சேலம் மத்திய சிறையிலுள்ள மகபூப் அலி மீது, குண்டாஸ் பாய்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X