சங்ககிரி: சங்ககிரி மலைக்கோட்டை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, சுற்றுலா பயணியர் பயன்பாட்டுக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பில், பூங்காவுடன், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, சென்னை, தொல்லியல் துறை உதவிப்பொறியாளர் கலைச்செல்வன், நேற்று, ஆய்வு செய்தார். அப்போது, அடிவாரத்திலுள்ள வீரபத்திரன் கோவில் சுற்றுச்சுவர், நாகர்கோவில் கிணற்றின் சுற்றுச்சுவர், சமீபத்தில் பெய்த மழையில் சரிந்து விழுந்ததை பார்வையிட்ட அவர், அதை சீரமைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். சேலம் தொல்லியல்துறை அதிகாரி ஈஸ்வர் உள்பட பலர் உடனிருந்தனர்.