பொது செய்தி

தமிழ்நாடு

வீரகனூரில் ரூ.1 கோடி மதிப்பு குட்கா பறிமுதல்

Added : நவ 30, 2019
Advertisement

ஆத்தூர்: வீரகனூரில், அ.தி.மு.க., பிரமுகரின் விவசாய தோட்டத்தில் உள்ள குடோனில், பதுக்கி வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வீரகனூர் பகுதியில், விவசாய தோட்டத்தில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக எஸ்.பி., தீபாகானிகேருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி, ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார், நேற்று இரவு, 7:00 மணியளவில் வீரகனூர், ராயர்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட பிரதிநிதி குமரன், 40, என்பவரது தோட்டத்தினுள் மினி லாரியில் இருந்து பொருட்கள் இறக்குவதை பார்த்து சந்தேகமடைந்து சென்றனர். மினி லாரி டிரைவர் உள்பட இருவர், தப்பியோடியதால், போலீசார் மினி லாரியை சோதனை செய்தனர். அதிலிருந்த மஹாராஷ்டிராவை சேர்ந்த சபீதா, 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த லாரியில் ஹான்ஸ், பான்மசாலா மூட்டைகள் இருந்ததும்; அங்குள்ள குடோனில் குவியல் குவியலாக குட்கா மூட்டை பெட்டிகள் இருந்ததும் தெரியவந்தது. இரவு, 10:00 மணியளவில் கெங்கவல்லி உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் சிங்கார வேல், ரமேஷ் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். லாரி மற்றும் குடோனில், 120 மூட்டை ஹான்ஸ், 80 மூட்டை விமல் பான்மசாலா பெட்டி, அதனுள் தலா ஐந்து கிராம் வெள்ளி காசு வீதம், 80 பெட்டிகளில் இருந்த வெள்ளி என, மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூ கூறுகையில், ''இடத்தின் உரிமையாளர் குமரன், அவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால், மூன்று மாதமாக இங்கு வரவில்லை. இவரது இடத்தை, சிலர் குட்கா பதுக்கி வைக்க பயன்படுத்தியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடத்தை வாடகைக்கு விட்டது யார், கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X