பொது செய்தி

தமிழ்நாடு

'முதல்வர் பதவியேற்ற ஓராண்டில் ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி'

Added : நவ 30, 2019
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லியில், முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டத்தில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் தலைமையில் நடந்தது. அதில், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி, பதவியேற்ற ஓராண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார். கடந்தாண்டில், பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. 2020 ஜனவரி முதல், 2.10 கோடி ரேஷன் கார்டுக்கு, அரிசி, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படும். வருமான சான்றுகளில், 50 ஆயிரம் ரூபாய் இருந்ததால், அரசு நலத்திட்ட உதவி பெறமுடியாத நிலை இருந்தது. முதல்வர் பழனிசாமி, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தியதால், முதியோர் உள்பட அனைத்து உதவிகளும் பெற எளிதாகியுள்ளது. வீரகனூர், பொன்னாளியம்மன் அணை, 25 கோடி ரூபாயில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட, 1,607 பயனாளிகளுக்கு, 1.91 கோடி ரூபாயில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், கெங்கவல்லி எம்.எல்.ஏ., மருதமுத்து, தாசில்தார்கள் கெங்கவல்லி சிவக்கொழுந்து, ஆத்தூர் பிரகாஷ், அட்மா குழு தலைவர்கள் கெங்கவல்லி ராஜா, தலைவாசல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X