சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்த 3 கடைகளில் புடவை, பணம் அபேஸ்

Added : நவ 30, 2019
Advertisement

ஓமலூர்: பஞ்சுகாளிப்பட்டியில், அடுத்தடுத்துள்ள மூனறு கடைகளில், பட்டுப்புடவை, பணத்தை, மர்மநபர்கள் திருடிச்சென்றனர். ஓமலூர் அருகே, பஞ்சுகாளிப்பட்டியில், 'வேல்முருகன் சில்க்ஸ்' பெயரில், பட்டுப்புடவை கடை உள்ளது. அதன் ஷட்டரை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உடைத்து, அங்கிருந்த நான்கு பட்டுப்புடவைகளை எடுத்துச்சென்றனர். அத்துடன், அருகிலுள்ள ஓட்டல் கடை ஷட்டரையும் உடைத்து, அங்கிருந்த பணத்தையும், அதன் அருகே, வெங்காய மண்டிக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்கள், பணத்தையும் திருடிச்சென்றனர். ஓமலூர் போலீசார், கடைகளில் ஆய்வு செய்து, அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X