பள்ளியில் சேர போலி உத்தரவு தயாரித்த 2 பேருக்கு காப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் சேர போலி உத்தரவு தயாரித்த 2 பேருக்கு காப்பு

Added : நவ 30, 2019

சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, ஆறுமுகம் பிள்ளை தெருவிலுள்ள, பாவை வித்யாஸ்ரம் பள்ளி தலைமையாசிரியர் சுகன்யா, 36. இவர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் அளித்த புகாரில், 'எங்கள் பள்ளியில் உதவியாளர் பணிக்கு வந்த யாமினிபிரியா, 29, போலி நியமன உத்தரவு வழங்கினார்' என, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, யாமினிபிரியாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் கூறியதாவது: இப்பள்ளியில் டிரைவராக பணிபுரியும், தாதகாப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன், 41, முன்னாள் டிரைவரான, மூணாங்கரட்டைச் சேர்ந்த கார்த்திக், 26, ஆகியோர், 13 ஆயிரத்து, 600 ரூபாய் பெற்றுக்கொண்டு, பள்ளியில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக உறுதியளித்து, நியமன உத்தரவை வழங்கினர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, பெண்ணை ஏமாற்றி, தனியார் பள்ளி நிர்வாகிகளின் கையெழுத்தை, போலியாக தயாரித்த பிரபாகரன், கார்த்திக் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X