பொது செய்தி

தமிழ்நாடு

சம்பள நிலுவை கேட்டு 100 நாள் பணியாளர் மனு

Added : நவ 30, 2019
Advertisement

கோபி: கோபி யூனியன், அளுக்குளி பஞ்சாயத்தை சேர்ந்த நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர், கோபி பி.டி.ஓ., குணசேகரனிடம் நேற்று, மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், அளுக்குளி பஞ்சாயத்தில், 150 தொழிலாளர்களுக்கு, மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் அனைவரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியும் தாமதிக்காமல், நிலுவை சம்பளத்தை வட்டியுடன் சேர்த்து தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மனுவை பெற்ற கோபி யூனியன் பி.டி.ஓ., குணசேகரன், நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கவே, அனைவரும் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X