பொது செய்தி

தமிழ்நாடு

பாவடி நிலத்தை உரிமை கொண்டாடுவதாக புகார்

Added : நவ 30, 2019
Advertisement

ஈரோடு: பாவடி நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது என சொந்தம் கொண்டாடுவதை தடுக்க கோரி, ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் மனு வழங்கினர்.
அவல்பூந்துறை மக்கள், செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் ஜெகநாதன் தலைமையில் வந்த சிலர், மனு வழங்கி கூறியதாவது: அவல்பூந்துறையில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக வசிக்கிறோம். கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் பாவடியாக செயல்பட்ட இடத்தை, 20 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்தோம். அவ்விடத்தில், 15 ஆண்டுக்கு முன், பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட, அரசு நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டி செயல்படுகிறது. அங்கு ஏற்கனவே இருந்த பஸ் நிறுத்தம் சிதிலமடைந்து, உபயோகத்துக்கு இல்லாமல் போனது. தற்போது மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து வசதிக்காக, அதே பகுதியில் மீண்டும் பஸ் நிறுத்தம் கட்டவும், சாலையை இந்நிலம் வரை விரிவாக்கம் செய்யவும், அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது இதற்கான பணி நடக்கிறது. ஆனால், சில சமூக விரோத சக்திகள், அரசு பணியை தடுத்து நிறுத்தும் வகையில், அந்நிலத்தை பேரூராட்சி நிலவகையாக மாற்றம் செய்து, இடையூறு செய்கிறது. அவ்விடம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி, வேலையை நிறுத்தியதுடன் பிரச்னை செய்கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி, பாவடிக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தவிர, அவ்விடத்தில் நிழற்கூடம், பொது சுகாதார வளாகம், சாலை விரிவாக்கப்பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X