பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: எஸ்.பி.,யை மாற்றக்கோரி கலெக்டரிடம் மனு

Added : நவ 30, 2019
Advertisement

ஈரோடு: ஜனநாயக இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு, எஸ்.பி., தடை விதிப்பதால், அவரை இடம் மாற்றக்கோரி, கலெக்டர் கதிரவனிடம், பல்வேறு இயக்கங்கள் சார்பில் மனு வழங்கினர்.
ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா மரணத்துக்கு, முறையான விசாரணை தேவை எனக்கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்தனர். இதற்கு அனுமதி வழங்காமல், நேற்று முன்தினம் இரவில், மக்கள் சிவில் உரிமை கழக மாநில தலைவர் கணகுறிஞ்சி, காந்திய மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பெரியசாமி, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிலவன் உட்பட பலரை, போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து நேற்று காலை, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஊர்வலமாக வந்து கலெக்டர் கதிரவனிடம் மனு வழங்கி கூறியதாவது: அரசியல், மக்கள் விழிப்புணர்வுக்காகவும், மத்திய, மாநில அரசுகளின் விரோத செயல்பாடுகளை கண்டித்தும் ஜனநாயக முறையில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன் பொறுப்பேற்றபின், குறிப்பிட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. அதே நேரம், கஞ்சா, சீட்டாட்ட கிளப், டாஸ்மாக் மாமூல், ஒரு நம்பர் லாட்டரி, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, அதற்கான வசூல் தடையின்றி நடக்கிறது. எஸ்.பி.,யை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X