பொது செய்தி

தமிழ்நாடு

வளைந்த வழிகாட்டி பலகைக்கு விடிவு

Added : நவ 30, 2019
Advertisement

கோபி: தினமலர் செய்தி எதிரொலியாக, வளைந்த வழிகாட்டி பலகைக்கு விமோசனம் பிறந்துள்ளது. கோபி - ஈரோடு சாலையில், வெட்டுக்கிராய் பஸ் நிறுத்தத்தில், ஓடத்துறை கிராமத்துக்கு செல்லும் சாலையை, அடையாளம் காட்ட வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் வளைந்து காணப்பட்ட, வழிகாட்டி பலகையை, வாகன ஓட்டிகள் அறிய முடியாமல் அவதிப்பட்டனர். இதனால், வெளியூர்களில் இருந்து வருவோர் குழம்பினர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், வளைந்த வழிகாட்டி பலகையை இயல்பு நிலைக்கு சரி செய்து நிறுத்தியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X