கோபி: கணக்கீடு செய்ய இயலாததால், கடந்த செப்., மாத கட்டணத்தையே, நடப்பு மாத மின் கட்டணமாக நுகர்வோர் செலுத்த, கோபி கோட்டசெயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார். கோபி மின் பகிர்மான வட்டம், புதுப்பாளையம்பிரிவு அலுவலகத்தில், பாரியூர் பகிர்மானத்துக்கு உட்பட்ட, பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையம், புதுக்காடு, என்.ஆர்.பி., நகர், புதுக்காடு காலனி, ஜீவாநகர் மற்றும் முத்துநகர் பகுதிகளில், நவம்பர் மாத மின் கட்டண கணக்கீடு செய்யவில்லை. எனவே கடந்த செப்., மாத கட்டணத்தையே, இம்மாதத்தின் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்க, வேண்டுகோள் விடுத்துள்ளார்.