பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : நவ 30, 2019
Advertisement

துர்நாற்றம் அடிக்கும் சுகாதார வளாகம்: கொடுமுடி யூனியன், கொல்லங்கோவில் பேரூராட்சி, களிப்பாளையத்தில் உள்ள சுகாதார வளாகம், சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. உட்புற, வெளி வளாகத்தில் புழுக்கள் நெளிந்து, நடக்க முடியாத அளவு உள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், மக்கள் உள்ளே நுழைய அச்சப்பட்டு, திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்துகின்றனர். அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல், சுகாதார வளாகத்தை பராமரிக்க, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணி மந்தம்; மக்கள் வருத்தம்: ஈரோடு - பழைய கரூர் சாலையில் வெண்டிப்பாளையம் இரண்டாவது ரயில்வே கேட்டில், 'சப் வே' அமைக்கும் பணி பல மாதமாக நடக்கிறது. மழை துவங்கியதால், பணி கிடப்பில் போடப்பட்டது. இப்பணியால் சுற்றிலும் மண்ணை கொட்டி வைத்து, வழியை அடைத்ததால், மக்கள் சிரமப்படுகின்றனர். பணியை விரைந்து முடித்து, பாதையை ஏற்படுத்த வேண்டும். இங்கு தேங்கிய நீரை வெளியேற்றாததால் கொசு உற்பத்தியாகிறது.

புகை மூட்டத்தால் சாலையில் அவதி: அந்தியூர் யூனியன், கெட்டிசமுத்திரம் பஞ்., கிருஷ்ணாபுரம் - அந்தியூர் சாலையில், ஜே.ஜே.,நகர் வளைவு பகுதியில், குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். பஞ்., துப்புரவு பணியாளர்களே இச்செயலில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்படும் புகைமூட்டம், பல மணி நேரம் நீடிக்கிறது. சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், அப்பகுதிவாசிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர். குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

வேகத்தடை பணி எப்போது முடியும்? மொடக்குறிச்சி யூனியன், 46 புதூர் பஞ்சாயத்து, ரிங்ரோடு அருகே குதிரைப்பாளி-46 புதூர் செல்லும் வழியில் வேகத்தடை இருந்தது. அதை பெயர்த்தெடுத்து, நவீன முறையில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால் பெயர்த்த வேகத்தடைப்பகுதி கிடப்பில் போனதுடன், பள்ளம் பறித்தது அப்படியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்தும் ஏற்படுவதால், வேகத்தடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X