பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்க பணிக்கு அவல்பூந்துறையில் 'சர்வே'

Added : நவ 30, 2019
Share
Advertisement
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், அவல்பூந்துறை நால்ரோட்டில், சாலை விரிவாக்கம் செய்ய, பத்து மாதத்துக்கு முன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டனர். பணிக்காக, சாலையை ஒட்டிய பகுதி முதல், கடைகள் உள்ள பகுதி வரை, இரண்டு அடிக்கும் மேல் பள்ளம் தோண்டினர். அதன் பிறகு பணி நடக்கவில்லை. அதேசமயம் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக, அவல்பூந்துறையை சேர்ந்த

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், அவல்பூந்துறை நால்ரோட்டில், சாலை விரிவாக்கம் செய்ய, பத்து மாதத்துக்கு முன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டனர். பணிக்காக, சாலையை ஒட்டிய பகுதி முதல், கடைகள் உள்ள பகுதி வரை, இரண்டு அடிக்கும் மேல் பள்ளம் தோண்டினர். அதன் பிறகு பணி நடக்கவில்லை. அதேசமயம் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக, அவல்பூந்துறையை சேர்ந்த லோகநாதன், ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் லோகநாதன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நில அளவீடு செய்ய, நீதிமன்றம் ஒரு கமிஷனரை நியமித்தது. இதன்படி, அவல்பூந்துறை நால்ரோட்டில், நீதிமன்றம் அமைத்த கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில், மொடக்குறிச்சி தாலுகா தலைமை சர்வேயர் கலைச்செல்வி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நடராஜன் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், சர்வே பணியில் ஈடுபட்டனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X