பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் சோலார் உலர்த்தி: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : நவ 30, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வேளாண் விளை பொருட்களை உலர்த்த உதவும் வகையில், வேளாண் பொறியியல் துறை மூலம், மானியத்துடன் கூடிய சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க நிதி வழங்கப்படுகிறது.
விளை பொருட்களை அறுவடைக்குப்பின் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பான கூடாரங்களில் உலர வைத்து, சந்தையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்ய ஏதுவாக, பாலி கார்பனேட் தகடுகளால் ஆன பசுமைக்குடில் வகை சூரிய கூடார உலர்த்திகள், மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதனால் உலர்த்துவதற்கான கால அளவு, கூலியாள் செலவு, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு குறையும். சுகாதாரமான முறையில், இயற்கை தன்மை மாறாமல் உலர்வதால், தரம் உயர்ந்து, பூஞ்சை காளான் படிவதும் தவிர்க்கப்படும். விவசாயிகளின் தேவை, இடவசதிக்கேற்ப, சூரிய கூடார உலர்த்திகள், 400 முதல், 1,000 சதுரடி வரை அமைத்து கொடுக்கப்படுகிறது. வேளாண் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை, விவசாயிகளே தேர்வு செய்யலாம். சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில், 60 சதவீதம் அல்லது, 3.50 லட்சம் ரூபாய், இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது, மூன்று லட்சம் ரூபாய், இவற்றில் எது குறைவோ, அத்தொகை வழங்கப்படும்து. மேலும், விபரங்கள் பெற, ஈரோடு வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் - 94439 48227, கோபி உதவி செயற்பொறியாளர் - 99423 03069 என்ற எண்ணில் அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X