ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு அளித்தவர்களிடம், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேர்காணல் நேற்று தொடங்கியது. மொடக்குறிச்சி ஒன்றியம், சென்னிமலை வடக்கு ஒன்றியம், கொடுமுடி ஒன்றியத்துக்கு நேர்காணல் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் நடந்த நேர்காணலில், மாநில நிர்வாகிகள் அந்தியூர் செல்வராஜ், சச்சிதானந்தம், சந்திரகுமார், அவைத்தலைவர் குமார் முருகேஷ், நகர செயலாளர் சுப்பிரணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு, ஊத்துக்குளி குன்னத்தூர், பெருந்துறை ஒன்றியங்களுக்கு, இன்று நேர்காணல் நடக்கிறது.