பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபின் கூட்டணி முடிவு: மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு

Added : நவ 30, 2019
Share
Advertisement
ஈரோடு: ''உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானபின், யாருடன் கூட்டணி என முடிவு செய்வோம்,'' என, எம்.எல்.ஏ., தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.மனித நேய ஜனநாயக கட்சி, மாநில பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.,வுமான தமீமுன் அன்சாரி, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலையில், முக்கிய குற்றவாளி யாரையும் கைது செய்யவில்லை. இதற்கு காரணமான

ஈரோடு: ''உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானபின், யாருடன் கூட்டணி என முடிவு செய்வோம்,'' என, எம்.எல்.ஏ., தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.
மனித நேய ஜனநாயக கட்சி, மாநில பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.,வுமான தமீமுன் அன்சாரி, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலையில், முக்கிய குற்றவாளி யாரையும் கைது செய்யவில்லை. இதற்கு காரணமான பேராசிரியர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.,யில், 14 பேர் மர்மமாக தற்கொலை செய்துள்ளனர். இதற்கான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாணவியின் தற்கொலை குறித்து, உண்மை கண்டறியும் குழு, உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவித்ததும், யாருடன் கூட்டணி என கட்சி கூடி முடிவு செய்யும். ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் வெற்றிடம் ஏற்படவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க.,வில் முதல்வர் பழனிசாமி, வெற்றிடத்தை நிரப்பியுள்ளனர். தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும். கோடம்பாக்கத்தில் உள்ள சிலர், கனவு காண்கின்றனர். ஈரோட்டில், ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு எஸ்.பி., சக்தி கணேசன் அனுமதி வழங்குவதில்லை. அவரை பணி மாற்றம் செய்ய, காவல் துறை தலைவரிடம் புகார் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X