சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு குற்றவாளி 10 ஆண்டுகளுக்கு பின் கைது

Added : நவ 30, 2019
Advertisement

அந்தியூர்: நாகை மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் சாமியம் ரவி, 43; ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் அருகே, மூங்கில்பாளையத்தில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டதாக, இவருடன் சேர்த்து ஏழு பேரை, வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர். பவானி ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த, 2009ல் பின்பு ஜாமினில் வெளிவந்த ரவி, அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். ரவி மீது கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. ரவியை பிடிக்க, தனிப்படை அமைத்து, வெள்ளித்திருப்பூர் போலீசார், 10 ஆண்டாக தேடி வந்தனர். திருச்சி டோல்கேட் பகுதியில் திரிந்த ரவியை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பவானி ஜே.எம்., நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இதே வழக்கில் தலைமறைவாக இருந்த, குரு என்பவரை, தனிப்படை போலீசார், சமீபத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X