பொது செய்தி

தமிழ்நாடு

அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்ப மனு

Added : நவ 30, 2019
Advertisement

தர்மபுரி: அரூர் அடுத்த, கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை, அப்பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு இருவர் மனு கொடுக்க வந்தனர். உடலில் தட்டிகளை கட்டிக்கொண்டு, மனு கொடுக்க வந்த அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் இருவரும், தர்மபுரி மாவட்ட நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்க தலைவர் ஜெயபால், பொருளாளர் சுரேஷ் ஆகியேர் என்பது தெரியவந்தது. இவர்கள், தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பம்பிங் செய்து, மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீரேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால், இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 40 ஏரிகள், இதற்கு உட்பட்ட, 50ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். மேலும், 1.5 லட்சம் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறுவர். இத்திட்டதை நிறைவேற்றக்கோரி, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்க, இதுபோல் வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X