பொது செய்தி

தமிழ்நாடு

மழை பொழிவு, மண் தட்டுப்பாடு: கார்த்திகை அகல்விளக்கு விலை உயர்வு

Added : நவ 30, 2019
Advertisement

அதியமான்கோட்டை: மழை மற்றும் மண் தட்டுப்பாடால், கார்த்திகை அகல்விளக்கு விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீப திருநாள். இந்நாளில், பாரம்பரிய முறைபடி மண் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவதை மக்கள் தற்போது கடைபிடிக்கின்றனர். இதனால், அகல்விளக்குகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள அதேநேரத்தில், மழை மற்றும் மண் தட்டுப்பாடால், அதன் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அதியமான்கோட்டையை சேர்ந்த, கார்த்திகை அகல்விளக்கு தயாரிக்கும் கந்தசாமி கூறியதாவது: எளிதாக இருக்கிறது என்பதால், மெழுவர்த்தியால் செய்த ரெடிமேட் விளக்குகளை, கார்த்திகை தீப திருநாள்களில் மக்கள் ஏற்றி வந்தனர். இதனால், அகல்விளக்கு தயாரிப்பு தொழில் நலிந்து வந்தது. தற்போது, பாரம்பரிய முறைகளை கடைபிடிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த, இரு ஆண்டுகளாக மண் அகல்விளக்குகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் குடிமாரமத்து பணி மூலம் தூர்வாரப்பட்டன. இதனால், அகல்விளக்கு செய்ய, தனியார் நிலங்களில் இருந்து அதிக விலைக்கு மண் வாங்கப்பட்டது. மழையாலும் அகல்விளக்கு தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால், 350 முதல், 400 ரூபாய் வரை கடந்தாண்டு விற்ற, சிறிய அளவிலான ஆயிரம் அகல்விளக்குகள் தற்போது, 600 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் கடந்தாண்டை விட, இரண்டு ரூபாய் கூடுதலாக, ஏழு ரூபாய் எனவும் விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X