பொது செய்தி

தமிழ்நாடு

கடைமடை வரை தண்ணீர் வழங்க வேண்டுகோள்

Added : நவ 30, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது. அப்போது விவசாயிகளின் கேள்விகளுக்கு, கலெக்டர் பதிலளித்த விபரம்: விவசாயி பிரதாபன்: தர்மபுரி மாவட்டத்தில், ஏராளமான விவசாயிகள் பார்ம்ரோஸ் பயிரிட்டுள்ளனர். இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கொள்முதல் செய்பவர்கள், விலையை குறைத்து வாங்குவதால், புல் அறுக்கும் கூலி கூட மிஞ்சுவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், பார்ம்ரோஸ் விவசாயிகள் நலனுக்காக கொள்முதல் சந்தையை ஏற்படுத்த வேண்டும். கறவை மாடுகள் வாங்குவதில், வங்கிகள் ஏற்படுத்தும் விதிகளை தளர்த்த வேண்டும். நடப்பாண்டில் பெய்த கனமழைக்கு, இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து வரவில்லை. அப்பனஅள்ளி கோம்பையில் இருந்து, மாமரத்துப்பள்ளம் வரவேண்டிய நீர் திசைமாறி செல்கிறது. எனவே மாமரத்துப்பள்ளம் அருகே, 200 அடிக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். கலெக்டர்: விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்து வந்தால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், மாவட்ட நிர்வாகம் செய்து தர தயாராக உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


விவசாயி காதர்பாட்சா: வாணியாறு அணை நீரை நம்பி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக, தென்கரை கோட்டை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. அணையில் எவ்வளவு நீர் இருந்தாலும், கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், 300 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கடை மடை வரை தண்ணீர் வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கணக்கு காட்டுகின்றனர்.


கலெக்டர்: இதுகுறித்து முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு, கடைமடை விவசாயிகளுக்கும் உரிய தண்ணீர் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.


விவசாய சங்க தலைவர் சின்னசாமி: நடப்பாண்டில் கரும்பு சரியாக விளையாததால், பாலக்கோடு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை நிறுத்தப்பட உள்ளது. எனவே நீர் ஆதாரத்தை பெருக்க எண்ணேகொல் புதூர், அலியாளம் அணைக்கட்டு, புலிகரை ஏரிக்கு நீர் கொண்டும் வரும் திட்டம் உள்ளிட்ட, மூன்று நீர் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


கலெக்டர்: நீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் திட்டம் நடைமுறைக்கு வரும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X