பொது செய்தி

தமிழ்நாடு

மயான பாதை ஆக்கிரமிப்பு: வயலில் சடலத்தை எடுத்து சென்ற மக்கள்

Added : நவ 30, 2019
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், இறந்தவரின் உடலை வயல் வழியாக, மயானத்திற்கு கிராம மக்கள் எடுத்து சென்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மணஹள்ளியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மயானத்திற்கு செல்லும் பாதை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. இதனால், சடலங்களை வயல் வழியாக, எடுத்துச் செல்லும் நிலையுள்ளது. மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று ஜம்மணஹள்ளியை சேர்ந்த வேடியப்பன் மனைவி பட்டம்மாள், 68. என்பவர் இறந்தார். அவரது உடலை நெல், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள வயல் வழியாக, கிராம மக்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அரூர் சப்-கலெக்டர் பிரதாப்பிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: ஜம்மணஹள்ளியில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதை, அரசு புறம்போக்கு நிலமா அல்லது தனிப்பட்டவருக்கு சொந்தமான பட்டா நிலமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அரசு புறம்போக்கு நிலமாக இருந்தால், உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X