பொது செய்தி

தமிழ்நாடு

வினாடி - வினா போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Added : நவ 30, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி-வினா போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வட்டார அளவிலான துளிர் மற்றும் ஜந்தர், மந்தர் வினாடி-வினா போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட போட்டிகள், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வேதியியல், உயிரியல், பொது அறிவியல், வானியல், சுற்றுச்சூழல், நுண்ணறிவியல், கணிதம் மற்றும் காட்சி சுற்று ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நடுநிலை பிரிவில், திம்மசந்திரம் நடுநிலைப்பள்ளி, இடைநிலை பிரிவில், கல்லாரி அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலை பிரிவில் வேப்பனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. ஆங்கில வழியில், நடுநிலை பிரிவில் நல்லகானகொத்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம், உயர்நிலை பிரிவில் கிருஷ்ணகிரி டி.கே.சாமி பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X