பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் 101 நாடுகளின் நாணய கண்காட்சி

Added : நவ 30, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 101 நாடுகளின் நாணய கண்காட்சியை, மாணவ, மாணவியர் கண்டு ரசித்தனர். ஓசூர் அருகே, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், வரலாற்று தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில், நாணயங்கள் கண்காட்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலப்பா தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., எம்.எல்.ஏ., சத்யா, கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்தியா, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், சீனா, இந்தோனேசியா, ஈராக், இஸ்ரேல், ஜப்பான், தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, போலந்து, சுவீடன் உட்பட, 101 நாடுகளில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. பள்ளி மாணவ, மாணவியர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து, ஓசூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, இரண்டு லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட டேபிள், டெஸ்க், பெஞ்ச் ஆகியவற்றை, மாணவ, மாணவியருக்கு, எம்.எல்.ஏ., சத்யா ஒப்படைத்தார். ஏற்பாடுகளை, பட்டதாரி ஆசிரியர்கள் சீனிவாசன், ராஜாராம் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X