பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்செட்டி சாலையை கடந்த யானை கூட்டம்

Added : நவ 30, 2019
Advertisement

ஓசூர்: நொகனூர் காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய, 70க்கும் மேற்பட்ட யானைகள், அஞ்செட்டி சாலையை கடந்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன. கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து, கடந்த மாதம் வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்ந்தன. அதிலிருந்து பிரிந்த, 30க்கும் மேற்பட்ட யானைகள் சில வாரங்களுக்கு முன், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன. அவற்றை, ஓசூர் வனச்சரக பகுதிக்கு சென்று விடாமல் தடுக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஜவளகிரி வனச்சரகத்தில் இருந்து, 70க்கும் மேற்பட்ட யானைகள், சில நாட்களுக்கு முன் நொகனூர் காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன. இவை நேற்று மாலை, 6:00 மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியேறி மரகட்டா அருகே, அஞ்செட்டி சாலையை கடந்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன. இதனால், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள யானைகள் எண்ணிக்கை, 100 ஆக உயர்ந்துள்ளது. அஞ்செட்டி சாலையை யானைகள் கடந்ததால், சாலையின் இருபுறமும் சிறிது நேரம் வாகன போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X