பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு செல்ல மறுத்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 30, 2019
Advertisement

அரக்கோணம்: ஆண்டுதோறும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில் இருந்து, 50 துப்புரவு பணியாளர்கள், திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீப விழாவிற்கு சென்று, 10 நாட்கள் துப்புரவு பணி மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு, 50 துப்புரவு பணியாளர்கள் விழாவிற்கு செல்ல, நகராட்சி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் பணியாளர்கள் செல்ல மறுத்து, அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், துப்புரவு பணியாளர்கள் சங்க தலைவர் மலையாண்டி பேசியதாவது: துப்புரவு பணியாளர்கள், திருவண்ணாமலைக்கு வேலைக்கு சென்றால், சிறப்பு பேட்டா கொடுப்பதில்லை. அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாரிகளிடம், வாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர். ஆனால், அவர்கள் தர மறுக்கின்றனர். எனவே, அரக்கோணம் நகராட்சியிலேயே சிறப்பு பேட்டா கொடுத்தால்தான் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, அதிகாரிகள் சிறப்பு பேட்டாவை கொடுப்பதாக உறுதியளிப்பு கடிதம் கொடுத்தனர். அதன் பிறகு, ஆர்ப்பாட்டத்தை கை விட்டு திருவண்ணாமலைக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X