சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியரிடம் சில்மிஷம்: பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

Added : நவ 30, 2019
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் பஞ்., நடுநிலைப்பள்ளியில், 90 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 10 நாட்களுக்கு முன், வகுப்பறையில் கணித ஆசிரியர் பிரகாஷ் குமார், 54, ஆறாம் வகுப்பு படிக்கும், இரு மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதில் ஒரு மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதையடுத்து, பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், தலைமையாசிரியை சிவகாமி சுந்தரி, வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஆகியோரிடம் புகாரளித்தனர். ஒரு வாரமாகியும் ஆசிரியர் பிரகாஷ் குமார் மீது, பள்ளி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதை கண்டித்து, நேற்று மாணவியரின் பெற்றோர், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியரை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். மகேந்திரமங்கலம் போலீசார் மற்றும் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஆகியோர், பள்ளியில் பெற்றோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அங்கு வந்த பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், ஆசிரியர் பிரகாஷ்குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, தர்மபுரி, சி.இ.ஓ., முத்துகிருஷ்ணன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X