பொது செய்தி

தமிழ்நாடு

'அங்கன்வாடி மையங்களில் உலக தரம் வாய்ந்த கல்வி'

Added : நவ 30, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கரகூர் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வழி கல்வியை துவக்கி வைத்து, ஆர்.டி.ஓ., தெய்வநாயகி பேசியதாவது: அங்கன்வாடி மையங்களில், 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அறிவு, மொழி, மற்றும் மன எழுச்சி வளர்ச்சி தூண்டும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு மாதம் ஒரு தலைப்பு வீதம், கலந்துரையாடல், கதை சொல்லுதல் ஆகிய செயல்பாடுகள் அங்கன்வாடி பணியாளர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், அமீகா அறக்கட்டளை நிறுவனம் கல்வி உபகரணங்களை வைத்து, அந்நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி இலவசமாக கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X