பொது செய்தி

தமிழ்நாடு

'தினகரன் ரூ.1,000 கோடி மோசடி': போட்டு தாக்கும் புகழேந்தி

Added : நவ 30, 2019
Advertisement

சேலம்: அ.ம.மு.க.,வின் மாநில முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, சேலத்தில் அளித்த பேட்டி: தினகரனிடமிருந்து பணம் கேட்டதாக சொல்கின்றனர். அதை நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயார். சேலத்திலிருந்து, அ.ம.மு.க., வேட்பாளர்களுக்கு, 200 கோடி ரூபாய், லோக்சபா தேர்தலுக்கு கைமாறியது. என்னால் முடிந்த பணம் கொடுத்தேன். கோடிக்கணக்கில் அல்ல. தினகரன், லோக்சபா தேர்தலுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளார். அதை என்ன செய்தார் என, விளக்கம் தராவிட்டால், நான் கூறவேண்டிய திருக்கும். தினகரனிடம் பணம் கேட்டு, பிச்சை எடுப்பவன் அல்ல புகழேந்தி. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, தினகரன் மறுபடியும் தேர்தலில் நிற்கத்தயாரா. இப்போது நின்றால், 10 ஆயிரம் ஓட்டு கூட பெற மாட்டார். தி.மு.க., உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X