சேலம்: சேலம் மாவட்டத்தில், ஒன்பது லட்சத்து, 69 ஆயிரத்து, 862 ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், எந்த பொருளும் வேண்டாம் என்ற, 1,358 கார்டுகளுக்கு, இலவச வேட்டி, சேலையுடன், 1,000 ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்காது. அதேநேரம், சர்க்கரை கார்டை, அரிசி கார்டாக மாற்றிக்கொள்ள, நேற்று வரை வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், மாவட்டத்தில், 79 ஆயிரத்து, 342 சர்க்கரை கார்டுகளில், 38 ஆயிரத்து, 80 பேர் விண்ணப்பித்துள்ளனர். 41 ஆயிரத்து, 262 பேர் விண்ணப்பிக்கவில்லை. அதுபோக, சர்க்கரை கார்டு, 38 ஆயிரத்து, 80 பேர், அரிசி கார்டு, எட்டு லட்சத்து, 86 ஆயிரத்து, 254, போலீஸ் கார்டு, 2,908 என, நடப்பாண்டு, ஒன்பது லட்சத்து, 27 ஆயிரத்து, 242 ரேஷன் கார்டுகளுக்கு, பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 42 ஆயிரத்து, 620 கார்டுகளுக்கு, பொங்கல் தொகுப்பு இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE