குடிசை மாற்று வாரியத்தில் 336 வீடுகள் கட்ட பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிசை மாற்று வாரியத்தில் 336 வீடுகள் கட்ட பூஜை

Added : நவ 30, 2019

ஈரோடு: ஈரோட்டில், குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், 336 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது. விழாவில், கலெக்டர் கதிரவன் கூறியதாவது: மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போர் அகற்றப்பட்டு, இங்கு வீடு வழங்கப்படும். தேர்வாகும் பயனாளிக்கு, சொந்த வீடு, அவரது குடும்பத்தார் பெயரில் நிலம், வீடு இருக்கக்கூடாது. குடியிருப்புகள் கட்ட, மத்திய அரசு, 5.04 கோடி, மாநில அரசு, 20.16 கோடி, பயனாளி பங்குத்தொகையாக, 5.04 கோடி என, 30.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் மதிப்பு, ஒன்பது லட்சம் ரூபாயாகும். இத்திட்டப்பகுதியில் ஏற்கனவே கட்டியிருந்த, 228 பழைய வீடுகளை அகற்றி, புது வீடு கட்டப்படுகிறது. ஏற்கனவே இங்கு வசித்தவர்களுக்கு வீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X