ஈரோடு: உரக்கடைகள் விலைப் பட்டியலை கட்டாயமாக பார்வைக்கு வைக்க, வேளாண் இணை இயக்குனர் பிரேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பி.ஓ.எஸ்., இயந்திரங்களில் பதிவு செய்தே, உரத்தையும், ரசீதையும் வழங்க வேண்டும். பி.ஓ.எஸ்., கருவி மூலம் விற்காவிட்டால், உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உர விற்பனை நிலையங்கள், உரங்களின் விலை பட்டியலை, விவசாயிகள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். யூரியா உரத்துடன், வேறெந்த இடுபொருளும் வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. உரத்தை, கூடுதல் விலை, முறையான உரிமமின்றி விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.